115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்க

உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் & விண்ணப்பப் படிவம் (Membership Form)

நம் இன சொந்தங்கள் ஒவ்வொருவரும் பார்க்கவ குல சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன் பெறலாம். 

உறுப்பினர் ஆக தகுதிகள்:- 
  • பார்க்கவ குல சமுதாயத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். (உடையார், மூப்பனார், நயினார்
  • 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
  • ஆண், பெண் இருபாளரும் உறுப்பினராக சேரலாம்.
  • தமிழகத்தில், இந்தியாவில் பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்பவர்களும் உறுப்பினராக சேரலாம்.
  • ஒரே குடும்பத்தில் உள்ள பலரும் தனித்தனியாக உறுப்பினராகலாம்.

உறுப்பினர் கட்டணம் ரூ100/- (பணம் கட்டியத்தற்கான ரசீது வழங்கப்படும்) 

உறுப்பினர் சேர்க்க

விண்ணப்பித்திடும் வழிமுறைகள்:-

01.

இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பதிவிரக்கம் செய்து, பூர்த்தி செய்து பாஸ்போர்ட் சைஸ் புகைபடத்துடன் உரிய கட்டணத்துடன் முறையாக சமர்பிக்க வேண்டும்.

02.

உறுப்பினர் படிவத்தினை தமிழ்நாடு பார்க்கவ குல சங்க மாவட்ட நிர்வாகிகளின் மூலமாக தலைமைச் சங்கத்திற்கு சமர்பிக்க வேண்டும். (மாவட்ட வாரியாக நிர்வாகிகளின் பெயர், பதவி, முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் இதே வெப்சைட்டில் தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

03.

தவிர்க்க இயலாத சூழலில் தலைமைச் சங்க அலுவலகத்தில் நேரிடையாக வந்தும் சமர்பிக்கலாம்.

04.

ஒரு படிவத்தினை பயன்படுத்தி அதிகபட்சமாக 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். குறைந்த பட்சம் ஒரே பகுதியில் உள்ள 10 நபர்கள் உறுப்பினராக சேர்த்தால், அந்த பகுதியில் நமது சங்கத்தின் கிளை அமைப்பை ஏற்படுத்திடலாம்.

உறுப்பினர் சேர்க்க

உறுப்பினர் அட்டை

முறையாக முழுமையாக கட்டணத்துடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, ஏற்புடையாக இருப்பின் உறுப்பினர் அடையாள அட்டை (ஐ.டி.கார்டு) வழங்கப்படும். 2. இந்த உறுப்பினர் அட்டை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. 

0 +
ஆண்டுகள் சேவை
0 +
மாநாடுகள்
உறுப்பினர் சேர்க்க

பணம் கட்டிட வழிமுறைகள்:-

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் உறுப்பினர் சந்தா ரூ100/- (ஒரு முறை மட்டுமே), அதற்கான படிவம் தலைமைச் சங்கத்தில் உள்ளது, அப்படிவத்தில் 25 நபர்கள் சேர்க்கலாம். அப்படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர்களின் புகைப்படத்துடன் மாவட்டப் பொறுப்பாளர்கள் மூலமாக அல்லது மாவட்டப் பொறுப்பாளர்களிடம் பரிந்துரை பெற்று தலைமைச் சங்கத்திற்கு அனுப்பி உறுப்பினர் அட்டை பெற்றுக்கொள்ளலாம். 

உறுப்பினர் சந்தா தொகையை இந்தியன் பேங்க் சூளைமேடு கிளையில் உள்ள : 861968903 (IFS Code: IDIB000C123, CBS Code : 01835) என்ற கணக்கிலோ அல்லது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் என்ற பெயருக்கு பேங்க் டி.டி.யாகவோ அல்லது காசோலையாகவோ அல்லது நேரிடையாக ரொக்கமாகவோ செலுத்தலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  

01.
முறையாக முழுமையாக கட்டணத்துடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, ஏற்புடையாக இருப்பின் உறுப்பினர் அடையாள அட்டை (ஐ.டி.கார்டு வழங்கப்படும். )
02.
இந்த உறுப்பினர் அட்டை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

Our Website visitors

000077