உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மூலமாக மாத இதழ் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சங்க செய்திகளை உள்டக்கி ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டுவருகிறது.
பார்க்கவன் தூது என்ற பெயரில் மாத இதழ் சுமார் 35 ஆண்டுகள் வெளியிடப்பட்டது. இந்த இதழ் நமது சங்கத்தின் அடையாளமாகவும், வீடுதேடி வரும் சங்க இதழாகவும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பார்க்கவன் தூது இதழ் பார்க்கவன் மலராக சுமார் 15 மாதங்கள் வெளியிடப்பட்டது. தற்போது புதுப்பொலிவுடன், புதிய பதிவுடன் ஒருங்கிணைந்த முயற்சிகளோடு பார்க்கவன் பார்வை என்ற பெயரில் மார்ச் 2026 முதல் வெளியிடப்பட்டு வருகின்றது.
பார்க்கவன் பார்வைக்கு சந்தா கட்டணம்:-
பார்க்கவன் பார்வைக்கு ஆயுள் சந்தா ரூ2,500/-, ஆண்டு சந்தா ரூ300/-
உறுப்பினர் சந்தா தொகையை இந்தியன் பேங்க் சூளைமேடு கிளையில் உள்ள: 861970047 (IFS Code : IDIB0000123, CBS Code: 01835) தாங்கள் நேரிடையாகவோ அல்லது பார்க்கவன் தூது என்ற பெயருக்கு பேங்க் டி.டி.யாகவோ அல்லது காசோலையாகவோ அல்லது நேரிடையாக ரொக்கமாகவோ செலுத்தலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
விளம்பரம் செய்ய விரும்புவோர் அதற்குரிய கட்டணத்துடன் அனுப்பினால் மட்டுமே விளம்பரம் செய்யப்படும்.
ஒரு பக்கம் உள்ளே கலர் விளம்பரக் கட்டணம் ரூ7,500/-,
கலர் அரைப் பக்கம் ரூ4,000/-,
உள்ளே ஒரு பக்கம் கருப்பு வெள்ளை விளம்பரக் கட்டணம் ரூ6,000/-,
கருப்பு வெள்ளை அரைப் பக்கம் ரூ3,000/-,
முன் அட்டை உள்பக்கம் மற்றும் பின் அட்டை உள்பக்கம் விளம்பரக் கட்டணம் ரூ10,000/-,
பின் அட்டை விளம்பரக் கட்டணம் ரூ15,000/-,
நான்கு வரி மணமகன் / மணமகள் தேவை விளம்பரக் கட்டணம் ரூ1,000/-ஆக வசூலிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள வழி முறைகளை பயன்படுத்தி விளம்பரத்திற்கான கட்டணங்களை அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்க்கவன் பார்வைக்கான விளம்பரங்கள் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் தலைமைச் சங்க அலுவலத்திற்கு முழுமையாக வந்து சேர வேண்டும்.
தேவைப்பட்டால் 23 Cm X 15 Cm அளவில் வடிவமைத்தும் சாப்ட் காப்பியாக parkakvan 1965@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம்.
மேலும் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் தலைமைச் சங்க மேலாளர் திரு.எம்.முருகவேல் (செல்: 9841412075, 9710932075) அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இதுதொடர்பான விவரங்களை மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக சந்தா கட்டணம் மற்றும் விளம்பரக் கட்டணங்களை அனுப்பி வைத்திடலாம். (மாவட்ட நிர்வாகிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை இதே வெப்சைட்டில் தரப்பட்டுள்ளது)
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.





