உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் 1911 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது முதல், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சமுதாய உணர்வினையும் எழுச்சியினை ஏற்படுத்திடவும், சமுதாய மக்களை ஒருங்கிணைத்திடவும், ஊக்குவித்திடவும் மாநாடுகள் மற்றும் பேரணிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 118 ஆண்டுகளுக்கும் மேலாக நமது சமுதாயத்தின் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் வரலாற்றுப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளின் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
மற்றும் பிற பல்வேறு நோக்கங்களுக்காகத் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் உருவாக்கப்பட்டு, சமுதாய மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி கடந்த 118 ஆண்டுகளாகச் சிறப்புடன் வெற்றியுடன் செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் 1911 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது முதல், தமிழகம் மற்றும் பாண்டிச்சேர் பகுதிகளில் எழுச்சியுடன் மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இத்தகைய மாநாடுகள் மக்களிடையே சமுதாய உணர்வினையும் மற்றும் எழுச்சியினை ஏற்படுத்திடவும், சமுதாய மக்களை ஒருங்கிணைத்திடவும், ஊக்குவித்திடவும், அனுபவங்களை பகிர்ந்திடவும், எதிர்கால திட்டங்களை திட்டமிடவும் வழிகாட்டும் வகையில் நடத்தப்படுகின்றன. 1911 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மாநாடுகளின் விவரங்கள்
1911 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டில் முதல் மாநாடு கூடி, சமுதாய விழிப்புணர்வுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சோமேஸ்வரம், தஞ்சை (1912), பழையனூர், தஞ்சை (1914), எலவானூர்கோட்டை, விழுப்புரம் (1916), அச்சுதமங்கலம், திருவாரூர் (1924) மற்றும் தருமத்துப்பட்டி, திண்டுக்கல் (1925) ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன. அத்துடன் முடியனூர், பூமாரி (விழுப்புரம்) மற்றும் மின்னாம்பள்ளி (நாமக்கல்) ஆகிய ஊர்களிலும் மாநாடுகள் நடைபெற்று சங்கம் வேரூன்றியது.
மாரண்டஅள்ளி, தருமபுரி (1926), செம்பியன்மாதேவி, விழுப்புரம் (1935), ராசிபுரம், நாமக்கல் (1937), கும்பகோணம், தஞ்சை (1945) மற்றும் பட்டணம், ராசிபுரம் (1946) ஆகிய ஊர்களில் மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன. இரைவாசநல்லூர் (விழுப்புரம்) ஊரிலும் மாநாடு நடைபெற்று சங்கத்தின் அடித்தளம் மேலும் வலுப்பெற்றது.
பட்டணத்திற்குப் பிறகு புள்ளம்பாடி, லால்குடி, புதுக்குடி (திருச்சி), திருவாரூர், அதங்குடி, தெற்கு சமுத்திரம், அலவிடங்கான், தெற்கு காவனூர் (இராமநாதபுரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), உத்தமர்கோவில் (திருச்சி), அம்மாப்பேட்டை (சேலம்), சமுத்திரம் மணப்பாறை (திருச்சி), சேந்தமங்கலம், வினைத்தீர்த்தபுரம் (நாமக்கல்), ஆத்தூர் (சேலம்), புதுச்சேரி (பாண்டிச்சேரி) ஆகிய 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் மாநாடுகள் நடைபெற்றன. இதன் உச்சகட்டமாக 1955-ல் சேலத்தில் மாநில மாநாடு நடைபெற்றது.
திருச்சி (1971) மற்றும் பரமக்குடி, இராமநாதபுரம் (1971) ஆகிய ஊர்களில் மாநாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சேலம் மாநில மாநாடு (1984), மயிலாடுதுறை, நாகை (1985) மற்றும் புதுக்கோட்டை (1986) ஆகிய நகரங்களில் பிரமாண்ட மாநாடுகள் நடத்தப்பட்டு சமுதாயக் குரல் மேலும் வலுப்பெற்றது.
திருச்சி (1995) மற்றும் புதுக்கோட்டை (1995) மாநாடுகளுக்குப் பிறகு, சேலம் (2008), திருச்சி (2010) ஆகிய இடங்களில் மாநாடுகள் தொடர்ந்தன. மேலும் நகர்ப்புற ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில் 2008-ல் சென்னையில் மண்டல மாநாடு நடைபெற்றது.
27.05.2012 அன்று உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பார்க்கவ குல சொந்தங்கள் திரண்டு பங்கேற்க, தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் 100வது ஆண்டு நூற்றாண்டு விழா வரலாற்றுச் சாதனையாகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
2025 ஆம் ஆண்டு காளையார்கோவில் மதுரை மண்டல மாநாடு எழுச்சியுடன் நடத்தப்பட்டது. 115 ஆண்டுகளைக் கடந்து சங்கம் தன் பயணத்தைப் புதுப்பொலிவுடன் தொடர்கிறது.
மேலும், பல்வேறு மண்டல அளவிலான, மாவட்ட அளவிலான, வட்ட அளவிலான மாநாடுகள், குடும்ப விழாக்கள், எழுச்சி பயணங்கள், ஊர்லவலங்கள் / பேரணிகள் என தொடர்ந்து நடைபெற்றுள்ளன, மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.





