115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

திருமண தகவல் மையம்

திருமண தகவல் மையம்

திருமண தகவல் மையத்தின் சேவைகள்

  • தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தில் திருமண தகவல் மையம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது.
  • திருமண தகவல் மையம் (Matrimony Information Centre) என்பது திருமணத்திற்கு தயாராக உள்ள மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இணைக்கும் ஒரு பாலமாக கருதப்படுகின்றது.
  • திருமண தகவல் மையத்தில் பார்க்கவ குல சமுதாயத்தைச் சார்ந்த உடையார், மூப்பனார், நயினார் உட்பிரிவினரை சார்ந்தவர்கள் மட்டுமே பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • திருமண தகவல் மையத்தில் திருமணம் ஆக தயார் நிலையில் உள்ளவர்களும், மறுமணம் சேவைக்காக பிரத்யேக வரன் தேடுபவர்களும் பதிவு செய்திடலாம்.
  • திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் திருமண பதிவு படிவத்தினை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் நேரிலும் வழங்கிடலாம். மேலும் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்திடலாம். (படிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.)
  • திருமண தகவல்களை பதிவு செய்திடவும், திருமணத்திற்கு வரன் குறித்த தகவல்களை இலவசமாக பெற உதவும் மையம். பார்க்கவன் பார்வை மாத இதழில் திருமணத்திற்கு மணமகள்/ மணமகன் தேவை விளம்பரங்களையும் வெளியிடலாம்.
திருமண தகவல் மையம்

பதிவு செய்திடும் வழிமுறைகள்

திருமணத்திற்கான பதிவு செய்திடும் படிவத்தினை வரனின் பெற்றோர், பாதுகாவலர், உடன்பிறந்தோர், நல விரும்பிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபரே கூட தானாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
படிவத்தில் பூர்த்தி செய்யப்படும் தகவல்கள் சமீபத்தியதாகவும், உண்மையானதாகவும் சரிபார்க்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
திருமண தகவல் மையத்தில் பெண் மற்றும் மாப்பிள்ளை விபரங்களை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப குறிப்பு எடுத்துக்கொண்டு / பிரதி எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் புகைப்படம் அண்மையில் எடுக்கப்பட்ட இயல்பான படமாகவும் இருத்தல் நலம். திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திடவும், தகவல்களை பெறுவதும் இலவச சேவை.
பதிவு செய்த வரனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக தலைமைச் சங்கத்திற்கு தெரிவித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பதிவு செய்த பிறகு வேலையில் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி செய்யும் இடத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் விபரங்கள் இருந்தால், பதிவு படிவத்தில் அப்டேட் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருமண தகவல் மையம்

வரன் தேடுதல் மற்றும் தொடர்பு கொள்ளுதல்

  • பதிவு செய்த வரனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக தலைமைச் சங்கத்திற்கு தெரிவித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • மேலும் பதிவு செய்த பிறகு வேலையில் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி செய்யும் இடத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் விபரங்கள் இருந்தால், பதிவு படிவத்தில் அப்டேட் செய்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • வரன் தேடுவோர், வரன் வீட்டார் படிவத்தில் கொடுத்துள்ள விவரங்களை முறையாக சரிபார்த்துக் கொள்ளவும், படிவத்தில் உள்ள தகவல்கள் மற்றும் நம்பகத் தன்மைக்கு சங்கம் பொறுப்பு ஏற்காது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
  • திருமண தகவல் மையத்தின் மூலமாக நல்லதொரு வரன் அமையப் பெற்று, திருமணம் நடைபெற்று முடிந்தவுடன் தானாக மனமுவந்து விருப்ப அடிப்படையில் சங்க வளர்ச்சிக்காக நன்கொடையாகவோ சிலருக்கு பார்க்கவன் பார்வைக்காக சந்தா தொகையினையோ வழங்கி பெருமை சேர்க்கலாம்.
  • படிவத்தினை பூர்த்தி செய்வதில் சமர்ப்பிப்பதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டால், தலைமைச் சங்கத்தினை வேலை நாட்களில் (திங்கள் முதல் சனி கிழமை வரை) வேலை நேரங்கள் (காலை 09.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை), நேரில் வரலாம். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களுக்கு விளக்கங்களை பெற்றிடலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Our Website visitors

000077