115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

சங்கம் பற்றி

சங்கம் பற்றி

1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் நலன் & முன்னேற்றத்திற்கான தொடர் பயணம்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் 1911 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கடந்த 118 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னிலைப்படுத்தி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

பார்க்கவ குல மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவும், சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவும், தேவையின் போது சொந்தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் நமது சங்கம் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது.

Since 1911
சங்கத்தின் வரலாற்றுப் பயணம்

1911 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் துவங்கப்பட்ட நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம், சமுதாய மக்களின் உரிமைகளையும் முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்டு உருவானது. ஆரம்பத்தில் கிராம அளவிலான அமைப்பாகத் துவங்கி, இன்று தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை வரை லட்சக்கணக்கான பார்க்கவ குல மக்களை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ளது. நமது முன்னோடிகளின் தியாகமும், வழிகாட்டுதலும், சமுதாய உணர்வும் 115 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சங்கத்தை சிறப்புடன் வழிநடத்தி வருகிறது.

0 +
ஆண்டுகள் பாரம்பரிய சேவை
0 +
மாநிலங்களில் சங்க செயல்பாடுகள் இந்தியா அளவில், உலக அளவில் உள்ள பார்க்கவ குல உறுப்பினர்கள்
பார்க்கவ குல ஓர் கண்ணோட்டம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க பார்க்கவ குல சமுதாயம்

பார்க்கவ குல சமுதாயம் என்பது தமிழகத்தின் மிகப் பண்டைய, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிலவுடமை மற்றும் அரச குல வம்சாவழியாகும். இவர்களின் தோற்றம் மற்றும் வரலாறு குறித்து கி.பி. 1210 மற்றும் கி.பி. 1231 ஆம் ஆண்டு எழுதப்பட்ட திருக்கோவிலூர் மேலவடம் மற்றும் தெய்வீக மன்னன் செப்பேடுகள் மூலம் மிக முக்கிய ஆதாரங்கள் கிடைக்கின்றன.

சங்க இலக்கியங்கள் மற்றும் செப்பேடுகளின்படி, கடையேழு வள்ளல்களில் ஒருவரான பறம்பு மலைக்கோமான் வள்ளல் பாரி மற்றும் திருக்கோவிலூரை ஆண்ட மலையமான் தெய்வீகராசன் ஆகியோரின் திருமண வழித் தோன்றல்களாக பார்க்கவ குல சமுதாயத்தினர் அடையாளப்படுத்தப்படுகின்றனர். மேலும் முற்காலச் சோழ மன்னர்களான மனுநீதி சோழன், கரிகால சோழன் மற்றும் நரசங்க முனையரையர் போன்ற குறுநில மன்னர்களும் பார்க்கவ குல சமூகத்தின் பின்னணியோடு தொடர்புப்படுத்தப்படுகின்றனர்.
பார்க்கவ குல சமுதாயம் என்பது வரலாறு, நிர்வாகம், கல்வி, விவசாயம், தொழில், கலாச்சாரம் மற்றும் நவீன முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தமிழக பாரம்பரிய சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பார்க்கவ குல சமுதாயம் மூன்று பிரதான உட்பிரிவுகளைக் கொண்டது: நத்தமன், மலையமன், சுருதிமன். உடையார், மூப்பனார், நயினார் போன்ற பட்டப்பெயர்கள் பார்க்கவ குல சமுதாய மக்களின் பாரம்பரிய அந்தஸ்தையும் சமூக அமைப்பையும் வெளிப்படுத்துகின்றன.

வரலாற்று ரீதியாக படைத்தளபதிகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்த பார்க்கவ குலத்தினர், பிற்காலத்தில் நில உடைமையாளர்களாகவும் (Land Lords), விவசாயிகளாகவும் மாறினர் எனக் கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க பார்க்கவ குல சமுதாய மக்களை ஒருங்கிணைத்து முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும் வகையில், 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள் மணம்பூண்டி திரு. ம.ரா. குமாரசாமி அவர்களால் திருக்கோவிலூரில் பார்க்கவ குல சங்கம் தொடங்கப்பட்டது.

திரு. ம.ரா. குமாரசாமி அவர்களுடன் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை திரு. மே.வே. துரைசாமி உடையார், வெள்ளையூர் திரு. சொக்கலிங்கம் உடையார், மாரண்டஅள்ளி திரு. எம்.ஆர். வெங்கடாசலம் உடையார், வில்வராயநல்லூர் திரு. முத்துக்குமாரசாமி உடையார், திருவாரூர் திரு. எஸ். சிவவடிவேல் உடையார் ஆகியோரின் பெருமுயற்சியால், ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் தலைமையில் பார்க்கவ குல சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் சங்கத்தின் முதல் தலைவராக மணம்பூண்டி திரு. ம.ரா. குமாரசாமி உடையார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக வரலாற்றில் ஒரு சாதி சங்கம் 100வது ஆண்டை கொண்டாடியதாக வரலாறு இல்லை!

நமது பார்க்கவ குல சங்கத்தின் 100வது ஆண்டு விழா 27.05.2012 அன்று விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் மிக எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நமது பார்க்கவ குல சங்கம் திரு. ம.ரா. குமாரசாமி உடையார் மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்த தலைவர்களால் உருவாக்கப்பட்டு, நம் இன மக்களின் நல்லாதரவோடும், நல்வாழ்த்துகளோடும், எழுச்சியுடன் கூடிய பங்கேற்புடன் ஆல் போல் தழைத்து அழகுபோல் வேரோடி இன்று செழித்து வருகிறது. 100 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடி, 125 ஆம் ஆண்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

சங்கத்தின் இந்த வளர்ச்சிக்கு காரணம் — சரியான இலக்குகள், சரியான அணுகுமுறைகள், நல்ல-வல்ல தலைமை, மாவட்ட-வட்ட-கிளைச் சங்கங்களின் ஒத்துழைப்பு, மற்றும் சமூக மக்களின் ஈடுபாடும் பங்கேற்பும் ஆகும். கண்டிப்பாக நமது பார்க்கவ குல சங்கம் 200 ஆம் ஆண்டு விழாவினையும் காணும். தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் ஒரு அமைதியான ஒற்றுமையான, முன்னோடியான சங்கம். நம் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நம்மாலான நன்மைகளை செய்வதற்காகத் தான் இச்சங்கம் துவங்கப்பட்டது.

சங்கத்தை வழிநடத்திய மாநிலத் தலைவர்கள்

திரு. ம.ரா. குமாரசாமி உடையார் (1911 ஆகஸ்ட் 6 – 1929) — நிறுவனத் தலைவர்

சேலம் திரு. என். அருணாசல உடையார் (1969 – 1988)

சென்னை திரு. என்.பி.வி. இராமசாமி உடையார் (1988 – டிசம்பர் 1998)

கபிஸ்தலம் திரு. ஆர். சௌந்தரராஜ மூப்பனார் (1998 – 2009)

திரு. கோவைத்தம்பி உடையார்
(மார்ச் 2009–ஏப்ரல் 2010)

திரு. ஆர். பாண்டுரங்கன் உடையார்
(ஏப்ரல் 2010 – டிசம்பர் 2026)

உயர்திரு.வி.ஆர். வெங்கடாசலம் உடையார்

- மாநில கௌரவத் தலைவர்
(தற்போதைய தலைமை)

இவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் பார்க்கவ குல சங்க செயல்பாடுகள் செவ்வேனே சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

குறிப்பு: தமிழ்நாடு பார்க்கவ குல சங்க மேம்பாட்டிற்காக பணியாற்றி, பங்களிப்பு செய்த அனைத்து மாநில நிர்வாகிகளின் விவரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சமுதாயக் கருத்துகள்

நமது சமுதாய முன்னோடிகளின் கருத்துரைகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக நமது சமுதாய மக்களின் நலனைப் பாதுகாத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய உரிமைகளைப் பெற்றுத் தருவதில் தொடர்ந்து முன்நின்று செயல்பட்டு வருகிறது.

shape-image

நமது சமுதாய மக்களை ஒன்றிணைத்து, கிராமம் முதல் மாநில அளவு வரை அமைப்புகளை வலுப்படுத்தி, எதிர்கால இளைஞர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் உயரிய பணியை இச்சங்கம் சிறப்பாகச் செய்கிறது.

shape-image

சங்கத்தின் மூலமாக அளிக்கப்படும் கல்வி வழிகாட்டுதல்களும், போட்டித் தேர்வு விழிப்புணர்வுகளும் நமது சமுதாயத்தைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள் அரசு உயர்பதவிகளை அலங்கரிக்கப் பெரிதும் உதவுகின்றன.

shape-image

Our Website visitors

000077