115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

மாணவர்களுக்கான கல்வி, தொழில் & வேலைவாய்ப்பு வழிகாட்டி

வேலைவாய்ப்பு வழிகாட்டி

மாணவர்களுக்கான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்

 

  • +2 படித்த பிறகு என்னென்னபடிப்புகளைப் படிக்கலாம் என்பது தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. சரியான படிப்பினைத் தேர்வு செய்ய உதவும் ஒரு வழிகாட்டி.
  • இந்தப் பகுதியில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் என்னென்ன படிப்புகளை படிக்கலாம், எத்தனை வருடங்கள், அதற்கான தகுதிகள் என்ன, அதன் மூலமாக கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள்… குறித்த விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  
  • இந்தப் பட்டியல் முதல் கட்டமாக தகவல்களை அறிந்து கொள்ள உதவும்.  
  • என்னென்ன துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளது என்கின்ற விவரங்கள் சப்ஜெக்ட் வாரியாக மற்றும் துறை சார்ந்த படிப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ளது இது ஒரு துரித கால அடிப்படையில் கோர்ஸ்களை  தேர்வு செய்ய உதவும் முதன்மை பட்டியல் ஆகும்.
  • இந்த வழிகாட்டி பகுதியில் மூன்று பகுதிகள் இடம் பெற்றுள்ளன ஒவ்வொரு பகுதியிலும் இடம் பெற்றுள்ள விபரங்கள் ஆவன.   
  • பகுதி – I: +2க்குப் பிறகு Course Options – Quick Reference Master Table 
  • பகுதி – II: துறைவாரியான விரிவான Course Guide
  • பகுதி – III : “எனக்கு எந்த Course?” – Student Decision Guide

குறிப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்ற விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. அவ்வப்போது கோர்ஸ் பற்றிய விபரங்கள், தகவல்கள் மாறுபடலாம். தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வேலைவாய்ப்பு வழிகாட்டி

இளைஞர்களுக்கான வழிகாட்டும் தகவல்கள்

இளைஞர்களுக்காக வழிகாட்டும் தகவல்கள் இந்த பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். இந்த வழிகாட்டும் தகவல்களின் நோக்கங்கள் ஆவன. 

விரும்பும் படிப்புகளை அறிந்து, தேர்வு செய்து கல்வி பயில வழிகாட்டுதல்
நம் சமுதாய இளைஞர்கள் என்னனென்ன படிப்புகளை படித்திடலாம்? எப்படி தேர்வு செய்வது? என்ன கோர்ஸ் படித்திடலாம்? புதியதாக உருவாக்கப்பட்டுள்ள படிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ற படிப்புகளை அறிந்து, தேர்வு செய்து படித்து பயன்பெற வழிகாட்டுதல்.
வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை, விளம்பரங்களைப் பகிர்தல்
நம் இன மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பித்திட வசதியாக, பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்தல் மற்றும் இதன் மூலம் விருப்படுவோர் விரும்பும் வேலைகளுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெற வழிகாட்டுதல்.
போட்டித் தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்
தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, கார்ப்ரேட், ரயில்வே, பேங்க், யூபிஎஸ்இ, மற்றும் இதர வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்திட மற்றும் தயாராகிட மற்றும் தேர்வு எழுதிட வழிகாட்டுதல்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வழங்குதல்
மேலும் இளைஞர்களுக்கான மாணவ மாணவியர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அவ்வப்போது இந்த வெப்சைட் மூலம் பகிர்ந்து பயன் பெற உதவிடல்
வேலைவாய்ப்பு வழிகாட்டி

கிடைக்கப் பெற்ற தகவல்களை பொதுநலன் கருது அப்படியே தங்களுக்கு வழங்கிட உள்ளோம். விளம்பரம் குறித்த அல்லது பகிரப்பட்ட செய்திகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ளவும். இந்த தகவல் பரிமாற்றம் இளைஞர்கள் தேவை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல் மட்டுமே. இதில் பகிரப்படும் வேலை வாய்ப்பு குறித்த செய்திகள் பார்க்கவ குலம் சமுதாயத்தினை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம் மற்றும் பொது அமைப்புகளாகவும், நிறுவனங்களாகவும் இருக்கலாம். இந்தப்பகுதி வேலை வாய்ப்பு செய்திகளை பகிர்ந்து, இதன் மூலமாக வேலை தேடுவோருக்கு தகவல்களை வழங்கி அவர்கள் விருப்பப்படி விண்ணப்பிக்க வழிகாட்டுதல் மட்டுமே ஆகும். 

Our Website visitors

000077